Never despise/ avoid learning on mathematical science and literature
===============
விவாதம்
hachappa:- கேள்வி: படிப்ப அவமதிக்க வேண்டாம்இன்னு சொல்ல வருதா (பள்ளி படிப்பு)? இதுக்கும் “ஓதுவது ஒழியேல்” க்கும் என்ன வித்தியாசம்?
பதில்: இந்த பாடலில் “தூற்றாதே” என்பதை அலட்சியம் செய்யாதே என்று எடுத்துகொள்ளலாம். அதாவது, கணிதம் மற்றும் இலக்கியம் ஆகிய இருதுறைகளையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.
(பதில்)madhu6045: வேறு பார்வை – மொழி எழுத்தாலும் எண்ணாலும் மட்டும் தான் எழுதப்படுகிறது. எண் என்பது குறியீட்டு மொழி.எழுத்து என்பது கருத்து மொழி. இவற்றை ஏற்காமல் இகழ்ந்தால் வாழ்வின் எவ்வித ஒழுங்கையும் புரிந்து கொள்ள இயலாது என்பதால் இந்த அறிவுரை. அதனால் தான் வள்ளுவரும் ‘இவ்விரண்டும் கண்ணென்ப’ என்கிறார்.
இதே கருத்துடன் திருக்குறள்,
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” :392
ஆக, எண் கற்பது அறிவை வளர்க்கும் என்றும் எழுத்து (இலக்கியம்) கற்பது பண்பாட்டை வளர்க்கும் என்றும் நினைத்து கொண்டால் சிறந்தது! இவை இரண்டும் தூற்றாதே என்று ஔவையும், இவை இரண்டும் ஒரு உயிருக்கு இரண்டு கண்கள் போன்றது என்று திருவள்ளுவரும் அறிவுறுத்துகிறார்கள்.
உதாரணமாக: இன்றைய நிலையில் அதிகமானோர் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி போன்ற துறைகளில் தான் நல்ல எதிர்கால வாய்ப்பு உள்ளது என்றும் இலக்கியம் போன்ற துறைகளில் அதிகம் நல்ல வாய்ப்பு இல்லை என்றும் எண்ணுகின்றனர், ஆகையால் இத்துறைகள் சார்ந்து கற்றுகொள்வதில்லை. இது போன்று அலட்சியப்படுத்தி ஒதுக்கக்கூடாது என்று (எந்த காலத்திற்கும் பொருந்தும்படியாக!) அறிவுறுத்தப்படுகிறது.
“ஓதுவது ஒழியேல்” என்ற பாடல் மூலம் தொடர்ந்து கற்க வேண்டும் என்றும் கற்கும் பழக்கத்தை கைவிடகூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. (கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு)
உதவி:
பேராசிரியர் திரு ஜார்ஜ் ஹர்ட் தனது உரையின் நிறைவில் இந்த கருத்தை உதாரணமாக கூறுகிறார் – http://www.youtube.com/watch?v=gLBwj1YSRNc
௨. திருக்குறள் – http://www.thirukkural.com/2009/01/blog-post_8369.html
===============